Snippet

தகவல் துளிகள்-1

தகவல் துளிகள்-1

  1. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படுவதில்லை.

  2. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியாக உள்ளன.

  3. மதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச் சான்றிதழையோ தொலைத்த மாணவர், டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து அது கிடைக்கும்வரை, சி.சி.எம். எனப்படும் சான்றிட்ட மதிப்பெண் நகலை (சர்ட்டிபைடு காப்பி ஆஃப் மார்க்‌ஷீட்) அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெற்று உபயோகிக்கலாம்.

  4. ஓர் ஆண்டு வரை இந்த CCM  சான்றிதழைப் பயன்படுத்தலாம்.

  5. பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் பெற்ற மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாகக் கருதினால், மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம். 

  6. மொழிப் பாடங்களில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான  கட்டணம் ரூ.305. இதரப் பாடங்களுக்கான கட்டணம் (தனித்தனியே) ரூ.205. மறுகூட்டலுக்கான கட்டணத் தொகையை தாங்கள் படித்த பள்ளியில் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 

  7. விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்கள், மதிப்பெண் மறுமதிப்பீடு கோரி சம்பந்தப்பட்ட பள்ளி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  8. பிளஸ் டூ தேர்வில் மூன்று அல்லது அதற்கும் குறைவான பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் உடனடி மறுதேர்வை (மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு) எழுதலாம். 

  9. பிளஸ் டூ தேர்வில் தோல்வி அடைந்து, உடனடியாக மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு துணைக் கவுன்சலிங் நடத்தப்படுகிறது.

Leave a Reply